சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jul 2015

தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா?

ந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்பட்டது. அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு மீண்டும் கட்டமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. இந்த சமயத்தில் சச்சின், டிராவிட்,கும்ப்ளே போன்றவர்களையும் வார்த்தெடுக்க வேண்டியமும் கட்டாயமும் கங்குலியின் கூடுதல் வேலை. அதனை கங்குலி மிகத்திறமையாக செய்தார். ஆனால் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற சமயத்தில் இந்திய அணிக்கு பெரியளவில் நெருக்கடி இல்லையென்றே கூற வேண்டும். 

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பதுதான் இந்திய அணியின் கேப்டன்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால். அதில் கங்குலி அபார வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். கங்குலி தலைமையில் இந்திய அணி, வெளிநாட்டு மண்ணில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11ல் வெற்றி கண்டுள்ளது. அதாவது 39.3 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. தோனி தலைமையில் இந்திய அணி 28 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளையே கண்டுள்ளது. வெற்றி சராசரி 21.4 சதவீதம் மட்டுமே.

கங்குலியின் கேப்டன்சியில்தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வீரேந்திர சேவாக், ஹர்பஜன், ஜாகிர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் உருவெடுத்தனர். இந்த நால்வரையும் பட்டை தீட்டியதில் கங்குலி முக்கிய பங்காற்றினார். ஆனால் இந்த நான்கு வீரர்களால் அதிக பலன் அடைந்தது தோனி தலைமையிலான இந்திய அணிதான். சேவாக் முதலில் மிடில் ஆர்டரில்தான் களமிறங்கினார். ஆனால் இதே காலக்கட்டத்தில் மிடில் ஆர்டரில் சச்சின், டிராவிட், கங்குலி, வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோரும் ஆடி வந்தனர். எனவே சேவாக்கை தொடக்க வீரராக களமிறக்க கங்குலிதான் முடிவெடுத்தார். அதற்குபின் சேவாக் விஸ்வரூபம் எடுத்ததை யாரும் மறுக்க முடியாது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அதிக பணம் புழங்கினாலும், சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட்டுக்கு என்று பெரியளவில் மரியாதை கிடையாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள்ள மரியாதை இந்திய அணிக்கு இருந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். வெளிநாட்டு மண்ணில் கங்குலி தலைமையிலான இந்திய அணி அடைந்த வெற்றியே அந்த மரியாதையை உருவாக்கியது. களத்தில் சில நேரங்களில் ஆக்ரோஷம் காட்டி கங்குலி சர்ச்சையில் சிக்கினாலும், பெரிய அளவிலான விமர்சனங்கள் கங்குலி மீது எழுந்தது இல்லை. அர்ஜுனா ரணதுங்காவால் இலங்கை கிரிக்கெட்டுக்கு எப்படி புதியதொரு மரியாதை உருவானதோ அதே போல் இந்திய அணிக்கு உரிய மரியாதை கங்குலியால் கிடைத்தது.
ஆசிய துணைக்கண்டத்தை தாண்டி வெளிநாட்டு மண்ணில் கங்குலியின் பேட்டிங் திறமை மெச்சக் கூடியது. பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக144 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 128 ரன்களையும் அடித்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் கங்குலியின் சராசரி 40.23 சதவிகிதம் ஆகும். ஆனால் தோனி ஆஸ்திரேலிய மண்ணில் சதம் கண்டது இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 6வது அல்லது 7வது விக்கெட்டாக களமிறங்கியது கூட ஒரு காரணமாக இருக்கலாம்No comments:

Post a Comment