சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jul 2015

இன்னும் 15 ஆண்டுகளில் ‘லிட்டில் ஐஸ் ஏஜ்’ - விஞ்ஞானிகள் கணிப்பு!

15 ஆண்டுகளில், அதாவது 2030-ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும், குறிப்பாக வட  துருவ நாடுகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சூரியனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ‘Little Ice Age’ என அழைக்கப்படும் இந்த சூழலில் உலகின் பல ஏரிகளும், ஆறுகளும் ஐஸ்கட்டியாக உறைந்துவிடும் என சொல்கிறார்கள்.  சூரியனின் சுழற்சி, இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Northumbria பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Valentina Zharkova எனும் பேராசிரியரின் குழுதான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Llandudno நகரில் நடந்த தேசிய வானியல் கூட்டத்தில் இந்தக் கணிப்பை சொன்னார் வேலன்ட்டினா.

(1677-ம் ஆண்டில் 'Little Ice Age'-ன்போது உறைந்த தேம்ஸ் நதி. பின்னால் இருப்பது பிரபல லண்டன் பிரிட்ஜ் - ஓவியர்:  Abraham Condius) (நன்றி: Corbis)


2030 முதல் 2040 வரையிலான ஆண்டுகளில் சூரியனின் இயக்கம் மிகவும் குறைவாக இருக்குமாம். இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பமும், ஒளியும் குறைந்துவிடும். எனவே, உலகம் முழுவதும் பனியால் சூழப்படும் என்கிறார் வேலன்ட்டினா.

இது 2-வது லிட்டில் ஐஸ் ஏஜ்!

இப்படி நடக்க இருப்பது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே  1645-ம் ஆண்டு முதல்  1715-ம் ஆண்டுவாக்கில் சூரியனின் இயக்கம் குறைவாக இருந்தது. அப்போது ஐரோப்பா, வட அமெரிக்க கண்டங்கள் கடும் பனியால் சூழப்பட்டன. இதை ‘Maunder minimum' என்று அழைத்தார்கள். இதில் 1683-1684-ம் ஆண்டுவாக்கில் சுமார் 7 வாரங்களுக்கு இங்கிலாந்தின் தேம்ஸ் நதி முழுவதும் பனியால் உறைந்துவிட்டது. அப்போது அதன்மீது கண்காட்சிகள், பொருட்காட்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.

River Thames Frost Fair

(1683-ம் ஆண்டுவாக்கில் தேம்ஸ் நதி முழுவதும் உறைந்திருந்தபோது நடந்த பொருட்காட்சியின் ஓவியம் - ஓவியர் Thomas Wyke)

அப்போ குளோபல் வார்மிங் பத்தி கவலைப்பட வேண்டாமா?

இன்னும் 15 ஆண்டுகளில் வர இருக்கும் இந்தக் கடுமையான குளிரின் தாக்கத்தை உலக வெப்பமயமாதல் கொஞ்சமே குறைக்கும். ஆனால், வெப்பமயமாதல் இந்தக் குளிரினால் நிற்கப்போவதில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
தயாராகிடுங்க மக்களே!


No comments:

Post a Comment