சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

வியக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்!

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது. கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகம், வியக்க வைக்க கூடியதாக இருப்பதை புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

சமூக வலைப்பின்னல் சேவை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மென்லோ பார்க்கில் அமைந்துள்ளது. 

இந்நிலையில் பிரம்மாண்டமான அலுவலகத்தை தங்களுக்கென உருவாக்கி கொள்ளும் சிலிக்கான் வேலி நிறுவனங்களின் வழக்கப்படி, ஃபேஸ்புக்கும் புதிய தலைமை அலுவலத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த 2012 ல் இதற்கான பணிகள் துவங்கின. உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் பிரான்க் ஜெரி இந்த அலுவலகத்துக்கான வடிவமைப்பை உருவாக்கினார்.

ஃபேஸ்புக்கின் தற்போதைய தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம் முழுவதும் தயாராகி, அங்கு குடியேறியுள்ளது. 22 ஏக்கர் பரப்பில் 4,30,000 சதுர அடியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கீழ் தளம், தனி அறைகள் இல்லாமல் பிரம்மாண்ட ஒற்றை அறையாக அமைந்துள்ளது. 

ஃபேஸ்புக் சேவையின் மைய குறிக்கோளான சமூக உணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை தளத்தை திறந்த வெளி தன்மையுடன் - ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே அறையில் பணியாற்றக்கூடிய வகையில் உருவாக்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பார்க், தனது ஃபேஸ்புக் பதிவில் புதிய அலுவலகம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

திறந்த வெளி தன்மை கொண்டிருந்தாலும் ஊழியர்களுக்கான தனிப்பட்ட இடமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் ஊழியர்களுக்கான சிறந்த பொறியியல் இடத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அலுவலகம் அமைந்துள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார். கலை அம்சமும், நவீன வசதிகளும் இணைந்த வகையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

இதன் மாடியில் 9 ஏக்கர் பசுமை பரப்பு உள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் நடப்பது போல அலுவலக மாடியில் காலாற நடக்கலாம். இங்கு கஃபே உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. இந்த அலுவலகத்தில் கலைப்படைப்புகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


ஃபேஸ்புக் ஊழியர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், நிறுவனம் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் பயனாளிகளை அழைத்து அலுவலகத்தை படம் பிடித்து பகிர்ந்து கொள்ள அனுமதித்துள்ளது. அலுவலகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற அம்சக்களை படம் பிடித்து காட்டும் இந்த புகைப்படங்கள், ஃபேஸ்புக் அலுவலகத்தை பார்த்து வியக்க வைக்கிறது.

அலுவலகம் பற்றி மார்ஜ் ஜக்கர்பர்கின் பதிவு:https://www.facebook.com/photo.php?fbid=10101999874192881&set=a.612287952871.2204760.4&type=3&permPage=1

No comments:

Post a Comment