சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

'உத்தமவில்லன்' பாணியில் உருவான ஐ.சி.சி. 'வில்லன்' -முழுநீள காமெடி சித்திரம்

பி.சி.சி.ஐ 'தலைவர்' என்ற படத்தை ரசிகர்களால் இன்னும் மறந்திருக்க முடியாது. பி.சி.சி.ஐ தலைவர் படத்தை தயாரித்த அதே சீனு புரொடெக்சன்தான் ஐ.சி.சி. வில்லன் படத்தையும் தயாரித்துள்ளது. இதே நிறுவனம் தயாரித்த முதல் படமான பி.சி.சி.ஐ தலைவர் படத்தில் இடம் பெற்ற  பல காட்சிகள் மக்களால் மறக்க முடியாதவை. படத்தின் கதாநாயகனான ஸ்ரீநிவாசன் சென்னை சூப்பர் கிங்சை வியர்வை சிந்த உருவாக்கிய காட்சிகள் மக்களுக்கு உழைப்பின் மேன்மையை உணர்த்துவதாக அமைந்தது.

என்.ஆர்.ஐ வில்லனாக லலித் மோடி வரும் காட்சிகள் தியேட்டரில் அப்ளாஸ் வாங்கின. கிளைமாக்சில் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்ற காட்சிகள் மக்களை சிந்திக்க வைத்தன. குறிப்பாக உச்ச நீதிமன்ற காட்சியில் கதாநாயகனிடம் கேட்கப்பட்ட 'கிடுக்கிப்பிடி' கேள்விகள் மக்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது. கிளைமாக்சில் ஹீரோவே வெற்றி பெறும் வகையில் முடிவுறும் வழக்கமான தமிழ்படத்தில் இருந்து விலகி, கிளைமாக்சில் 'ஹீரோ' தோல்வியடைந்து வெளியேறுவதாக அமைக்கப்பட்டது இயக்குநரின் தைரியத்தை காட்டியது. படத்தின் முடிவுக்காகவே பி.சி.சி.ஐ தலைவர் படம் ஒரு வருடத்தையும் தாண்டி ஓடியது. 

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே சீனு புரொடெக்சன் நிறுவனம்தான் ஐ.சி.சி. 'வில்லன்' படத்தை முற்றிலும் நியூசிலாந்து- ஆஸ்திரேலிய நாடுகளில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளது. அழகிய நியூசிலாந்து நாட்டில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தில் பாடல் கிடையாது. இந்த படத்தில் வில்லன் உருவாகும் காட்சி மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், வங்கதேசமும் மோதும் அந்த காட்சியில்தான் ஐ.சி.சியின் முக்கிய வில்லன் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிறார்.
இந்த படத்திலும் இயக்குநர் பல்வேறு காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதாவது படத்தில் கிளைமாக்சில் மட்டும்தான் கதாநாயகன் வருகிறார். வேறு எந்த காட்சியிலும் வருவதில்லை. ஆனால் வில்லன் உருவாகும் காட்சி தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. படத்தின் கதைப்படி கதாநாயகனின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரோகித் சர்மா என்பவரை அவுட் ஆக்க முயற்சி நடக்கிறது. அதனை தாய்நாட்டில் இருந்து கொண்டே  கதாநாயகன் தடுத்து நிறுத்துவது  வில்லனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. கோபத்தில் கொதித்து போய் எனக்கு இந்த பதவியே வேண்டாம் என்று வில்லன் கொந்தளிக்கும் காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கின்றன.

ஐ.சி.சி. வில்லன் படத்தில் வில்லனாக வரும் முஷ்தபா கமால் மிக அருமையாக நடித்திருக்கிறார். தனது நாட்டுக்காக அவர் கண்ணீர் சிந்தும் காட்சிகள்  ரசிகர்களை நெகிழ செய்கிறது. ஆனால் முந்தைய படம் போல இந்த படத்தில் கதாநாயகன் தோல்வியடையவில்லை. வில்லனுக்கு தக்க பதிலடி கொடுக்க தாய்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியா போகிறார்.  மெல்பர்ன் என்ற இடத்தில் வைத்து வில்லனை நேருக்கு நேர் சந்திக்கிறார். நேரடிச்சண்டைகள் ரசிகர்களை அதிர வைக்கவில்லை. மாறாக சிந்திக்க வைத்தன. வாய்சண்டையிலேயே வெற்றி பெறுவது எப்படி என்பதுதான் இந்த படத்தில் இயக்குநர் மக்களுக்கு தரும் மெசேஜ்.  இதில் வில்லன் தோற்று ஓடி விடுகிறார். நம்ம கதாநாயகன் கோப்பையை கைப்பற்றிவிடுகிறார். தோற்று ஓடிய வில்லன் கதாநாயகனை பழிவாங்குவதுதான் மீதிக் கதை!No comments:

Post a Comment