சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Mar 2015

முப்பது நாளில் வித்தியாசமான விமர்சகனாவது எப்படி?

இப்போ ஒரு சினிமாவைப் பத்தி பாராட்டி பேச, எழுத குறைந்தபட்ச தகுதி என்ன? எப்போது ஒரு படத்தை பாராட்டலாம், எப்போது திட்டலாம், எப்போது சைலண்டா இருக்கணும், எப்போது வயலண்டா எகிறணும்... வாங்க கத்துக்கலாம்...

1. படம் ரிலீஸ் ஆன நேரத்துல யாரும் அதை சீண்டக் கூடாது. பிரியாணி சாப்படற நாய்க்கு 'பன்' குடுத்தா கெடைக்கிற வரவேற்பு மட்டும்தான் குடுக்கணும். ஏன்னா நாம அந்த படத்தைப் பத்தி முழுசா தெரியாம பாராட்டியோ, திட்டியோ சொல்லிருவோம். படம் ஓடித் தொலைச்சிட்டாலும் பரவாயில்ல. ஃபிளாப் ஆயிருச்சுன்னா? கன்பியூசா இருக்கா? வாங்க பாப்போம்.


2. தியேட்டர்ல நல்லா ஓடற படம், நல்ல படமா இருக்க சான்சே இல்ல, இதுல தெளிவா இருங்க. நாம திட்டற படம் நல்ல வசூல் ஆகணும், நல்லா ஓடணும். நாம பாராட்டற படம் ஓடணும், தியேட்டரை விட்டு. ஆனா ஒண்ணு, இங்க படம் ஓடலைன்னாலும் பரவாயில்ல. எத்தியோப்பியா இல்ல காங்கோவுல நல்ல படம்னு அவார்டு ஒண்ணாச்சும் வாங்கிருக்கணும் - காசக் குடுத்தாச்சும். (அதுக்கேண்டா இங்க வந்து படம் எடுத்தீங்கன்னு எல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா கலைச்சேவை ரொம்ப முக்கியம்.)

3. நம்மளோட விமர்சனத்த தமிழ்ல படிச்சு புரிஞ்சுக்கவே ஒரு கோனார் தமிழ் உரை வேணும். புரியற மாதிரி படம் எடுத்து விடறது அவிங்க வேலை, எவனுக்கும் புரியாத மாதிரி விமர்சனம் பண்றது நம்ம வேல. 'இது சோஷலிச சோகப் பின்னணியில் சோற்றுக்கே அல்லாடிய ஒரு சகாப்தத்தின் எச்சம் பற்றிய கதை. கதை மாந்தர்கள் நடிக்கவில்லை, உலாவியிருக்கிரார்கள். உயிருடன் அளாவியிருக்கிறார்கள். முன் நவீனத்துவத்துக்கு மூஞ்சியில் விடப்பட்ட அறை. பின்நவீனத்துவத்துக்கு பின்னால் விடப்பட்ட உதை' - அப்படிங்கற ரேஞ்சுல இருக்கணும். நம்ம தமிழ், படம் வரைஞ்சு பாகம் குறிச்சாலும் எவனுக்கும் புரியக் கூடாது. எதுக்கு வம்புன்னு ஒரு லைக் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாக்க போயிருவாய்ங்க.

4. விமர்சகனா இருக்கறது முக்கியம் இல்ல, விமர்சகனா வாழணும், ஏதாச்சும் வித்தியாசமா பண்ணிகிட்டே இருக்கணும். இல்லனா மறந்துருவாய்ங்க நன்றி கெட்டவய்ங்க. அதனால, பொழுது போகலைனா எதாச்சும் பழைய ஹிட் படத்தை தெருவுக்கு இழுத்துக்கிட்டு வந்து தாளிக்கணும். இல்லைனா, பழைய ஃபிளாப் படத்த பத்தி இருநூறு வரிக்கு மிகாமல் புகழணும்.

5. இந்த விதி எல்லாம் அப்ப சொப்பக படத்துக்கு மட்டும்தான். அவங்கதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாய்ங்க. ஓவர் மமதைல இடம் தெரியாமையும் கால வெச்சிடக் கூடாது. அப்புறம் சிக்கி சின்னாபின்னமாயிருவோம். பரந்த மனப்பான்மை இல்லாம பரம்பரையவே கெட்ட வார்த்தைல திட்டுவாயங்க. நம்ம ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கற ஒண்ணு ரெண்டு பொண்ணுகளுக்கும் ரெக்வெஸ்ட் அனுப்பி கொல்லுவாய்ங்க... வெவகாரம் பிடிச்ச பயபுள்ளக. வேணும்னா ஹாலிவுட் படத்து நடிகர்கள எவ்ளோ வேணும்னாலும் திட்டிக்கோங்க... கண்டுக்க மாட்டாய்ங்க.


6. ரொம்ப முக்கியமான ரூல் என்னன்னா, எந்த விமர்சனம் குடுத்தாலும் நடுவுல மானே, தானே மாதிரி, ரெண்டு மூணு கொரிய டைரக்டர்கள் பேர நுழைச்சு விட்ருங்க. அப்போதான் விமர்சனம் இன்டர்நேசனல் டச்சுல இருக்கும். 


No comments:

Post a Comment