சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2015

பிப்ரவரி 13: இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தின சிறப்பு பகிர்வு

சரோஜினி நாயுடு எனும் இந்தியாவின் கவிக்குயில் பிறந்த தினம் இன்று . ஆந்திராவில் வாசித்த வங்காள குடும்பத்தில் பிறந்தார் இவர்.இவரின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார் . இவரை ஒரு அறிவியல் மேதையாக்க அவர் விரும்பினார் . இவரின் உள்ளமோ கவிபாடுதலில் திளைத்தது .

மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி எனும் கவிதையை இயற்றினார் அதை படித்து பார்த்து பிரமித்த ஹைதராபாத் நிஜாம் இவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினார் . இங்கிலாந்திற்கு கணிதம் படிக்க போனவர் அங்கேயிருந்த இயற்கையின் வனப்பு இவரை ஆட்கொள்ள அற்புதமான் கவிதைகள் எழுதினார் ; அதைப்படித்து பார்த்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ் முதலிய ஆங்கிலேய எழுத்தாளர்கள் வியந்தார்கள் . ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாத அவரின் கவித்துவம் அவர்களை பிரமிக்க வைத்தது .
உடல்நிலை சரியில்லாமல் போக கணிதத்தை கைகழுவி நாடு திரும்பினார் . ஏற்கனவே வேறு சாதியை சேர்ந்த கோவிந்தசாமி நாயுடுவுடன் காதல் அரும்பி இருந்தது இவருக்கு ;வீட்டின் எதிர்ப்பை சமாளித்து அவரை கரம் பிடித்தார் . இவரின் கவிதைகளை பார்த்து அரசு கெய்சரி ஹிந்த் எனும் பட்டத்தை தந்தது . கோகலேவின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்கு கொண்டார் . ஜாலியன்வாலா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன் பட்டத்தை திரும்ப தந்தார்
1925 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் . இந்திய பெண் ஒருவர் காங்கிரசின் தலைவரானது அதுவே முதல் முறை . அவரை காந்தி இந்தியாவின் கவிக்குயில் என அழைத்தார் . நேரு இந்திய தேசியத்தின் உதயத்தாரகை என புகழ்ந்தார் .
ஆங்கிலேய அரசை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களில் பங்குகொண்டு சிறைசென்றார் . கவிதைகள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார் . "கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர் அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால் தீப்பந்தத்துடன் அநீதியை அழிக்க அவன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது" என சொன்னவர் அவர் .
இலையுதிர்கால கீதம்
இதயத்தில் இன்பம் தேங்குதலைப்போல
மேகங்களைப் பற்றித் தொங்கி ஆடுகிறது அஸ்தமனம்
பொற்புயல் போல மேகக்குஞ்சங்கள் மினுங்க,
உருகிய அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
மேகத்தை காற்று வன்மையாக உலுக்குகிறது
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் மென்குரலின் நாதம்
என் இதயம் கனவுகளால் களைப்பால் கவலையால் தனிமையால் படபடத்து உதிர்கிறது இலைகளாய்
எதற்காகக் கடந்ததை எண்ணித் துயருற வேண்டும் நான்?


No comments:

Post a Comment