சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2015

வளரும் கால் டாக்ஸி தொழில்! பயணம் பாதுகாப்பானதா?



கால் டாக்ஸி - சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் புதுவிதமான வர்த்தகம். கடந்த மாதம் உபர் என்ற வெளிநாட்டு கால் டாக்ஸி இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டில் தன் சேவையைத் துவங்கியுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 14 ரூபாய் என்ற அளவில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்,  டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் உபர் கால் டாக்ஸியில், அந்த கால் டாக்ஸி ஓட்டுநரால் கற்பழிக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே, இந்த கால் டாக்ஸி நிறுவனங்கள், ஓட்டுநரை சரியாகத் தேர்வு செய்வதில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என பலவிதமான குற்றச்சாட்டுகள் வரத்துவங்கின. இதற்கு கால் டாக்ஸி நிறுவனங்கள் எங்களுக்கு சம்பந்தமில்லை, எங்கள் கால் டாக்ஸி பாதுகாப்பாகதான் உள்ளன என தெரிவித்தன. உண்மையில் இந்த கால் டாக்ஸி பயணம் பாதுகாப்பானது தானா? இந்த சேவையை நம்பி பயணிக்கலாமா? இந்த சேவை ஆட்டோ தொழிலைப் பாதிக்குமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடினால் அதற்கு கிடைத்த பதில்கள் இதோ?

கால் டாக்ஸி தொழில்:

முதலில் இந்த கால் டாக்ஸி வர்த்தகத்தின் செயல்பாடு என்பது கால் டாக்ஸி நிறுவனமே ஓட்டுநர்களை நியமித்து தனது நிறுவனத்துக்கு என சில வாகனங்களை வைத்திருக்கும். அவை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாகனங்கள். இவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கு மொத்தமாக கார்ப்பரேட் புக்கிங் முறையில் செயல்பட்டு கொண்டிருக்கும். உதாரணமாக ஒரு .டி கம்பெனி தனது ஊழியர்களை வீட்டில்விட இவர்களது கால் டாக்ஸி தினசரி பயன்பட்டு வரும்.

இது அல்லாமல் அந்த கால் டாக்ஸி நிறுவனம் தனியார் டாக்ஸி வைத்திருப்பவர்கள் பதிவு செய்துவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கும். இதில் ஒருவர் வாகனத்தை பதிவு செய்துவிட்டு அவர்களது கருவியை வாகனத்தில் பொருத்திய பின்னர்  கால் டாக்ஸி நிறுவனத்துக்கு மாத வாடகையாக குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். இதற்கு அவர்கள் மாதம் 60,000 ரூபாய் அளவிலான பயண ஆர்டர்களைத் தருவார்கள். இதுதவிர, அவர்கள் தனியாகவும் ஆர்டர்களை எடுக்கலாம். எந்த இடத்தில் பயணியை ஏற்ற வேண்டும், எங்கு இறக்க வேண்டும். அவர் எந்த முறையில் பணம் செலுத்த உள்ளார். அவரது தொலைபேசி எண் ஆகியவற்றை கால் டாக்ஸியில் உள்ள திரை அமைப்பில் நிறுவனம் காட்டுகிறது. அதற்கேற்ப ஓட்டுநர் தனது ஆர்டர்களை எடுக்கிறார். இதேபோல, ஓட்டுநரின் விவரம், அவரது தொலைபேசி எண் பயணிக்கும் அனுப்பப்படுகிறது. இவர் எந்த இடத்தில் பயணித்து கொண்டிருக்கிறார் என்பது கால் டாக்ஸி நிறுவனம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

யாருக்கு என்ன பயன்?

கால் டாக்ஸி நிறுவனம்:
 எந்த விதமான வாகன செலவு, எரிபொருள் செலவு ஆகியவை இல்லாமல் வெறும் தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி ஆர்டர்களை அளிக்கிறது மற்றும் அதனைக் கண்காணிக்கிறது. இதற்கு மாத வாடகை வசூலிக்கிறது. இதன்மூலம் எந்தவித பெரிய முதலீடும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் நல்ல லாபம் அடைகின்றன. மேலும், இந்த நிறுவனங்கள் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் பயணியை இணைக்கும் பாலமாக மட்டும் உள்ளதால் இந்த நிறுவனங்கள் பெரிய செலவுகளைச் சந்திப்பதில்லை. அது மட்டுமின்றி கார்டுகள் மூலம் ஆர்டர் செய்யப்படும்போது அதற்கான சேவை கட்டணமும் கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.

டாக்ஸி உரிமையாளர்:
யாரையும் தேடி அலையாமல் இவர்களுக்கு எந்த இடத்தில் இருக்கிறார்களோ அதே இடத்தில் பயணங்களுக்கான ஆர்டர் கிடைத்து விடுகிறது. இவர்கள் செலுத்தும் மாத கட்டணத்துக்கு சேவை நிறுவனம் தேவையான ஆர்டர்களைத் தந்துவிடுவதால் மாதந்தோறும் ஆர்டர்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. மேலும், சொந்த ட்ரிப்களின்போது சேவை நிறுவனம் ஆர்டர் வழங்காது என்பதால், அதனையும் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.

வாடிக்கையாளர்கள்:

பேரம்பேசி குறிப்பிட்ட தொகைக்கு டாக்ஸியை புக் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மீட்டர் கட்டணம் என்பதால் மீட்டர் காட்டும் தொகையை அளிக்கலாம். மேலும், பணத்தை நேரடியாக நிறுவனத்துக்குச் செலுத்துவதன் மூலம் சில சேவை நிறுவனங்கள் குறிபிட்ட வங்கிகளுக்கு கேஷ் பேக் ஆஃபர்களை வழங்குவதையும், ஆப்ஸ் புக்கிங் சலுகையையும் பெற முடியும்.

பயணம் பாதுகாப்பானதா?

சமீபத்தில் டெல்லியில் உபர் டாக்ஸியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாக்ஸி பயணம்பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு இல்லை என்பதையே பதிலாக தருகின்றன டாக்ஸி சேவை நிறுவனங்கள். ஒருவர் பயணத்தைத் தொடங்கும்போது பயணியின் விவரம் ஓட்டுநருக்கும், ஓட்டுநர் விவரம் பயணிக்கும் அனுப்பப்படும் பயணப் பாதை சேவை நிறுவனத்தால் கண்காணிக்கப்படும். அதே கால் டாக்ஸியில் சொந்த ட்ரிப்பாக பயணம் மேற்கொள்ளும்போது அதற்கு சேவை நிறுவனம் பொறுப்பேற்காது. அதனால் அப்படி தவறு நிகழும்போது வாடிக்கையாளர்கள் சேவை நிறுவனத்தை கேள்வி கேட்டால் அதற்கு பதிலளிப்பது சிரமம். இதனைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் சேவை நிறுவனம் மூலமாக புக் செய்வது ஓரளவுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் எனறனர் சில டாக்ஸி ஓட்டுநர்கள்.

டிரைவர் தகவல்கள் பராமரிக்கப்படுகிறதா?

இந்த டாக்ஸியை ஓட்டும் டிரைவர்களின் தகவல்கள் பராமரிக்கப்படுகிறதா என்றால், அதில்தான் பிரச்னை உள்ளது. சேவை நிறுவனம் உரிமையாளரது தகவல்களையும், டாக்ஸி சம்பந்தப்பட்ட தகவலையும்தான் பராமரிக்கிறது. டிரைவர் சம்பந்தப்பட்ட தகவல்களை உரிமையாளர்தான் பராமரிப்பதாக கூறுகின்றனர் டாக்ஸி டிரைவர்கள். சில சமயம் உரிமையாளரே டிரைவராக இருக்கும்பட்சத்தில் சேவை நிறுவனத்திடம் அவரைப் பற்றிய தகவல்கள் இருக்கும். வாடிக்கையாளர் டிரைவர் மீது ஏதாவது புகார் கூறினால் அது உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாதுகாப்பான பயணத்துக்கு என்ன வழி?

இரவு நேரங்களில் வரும்போது வழியில் நிற்கும் சேவை நிறுவன கால் டாக்ஸிகளில் ஏறாமல், டாக்ஸியை புக் செய்து பயணிப்பது நல்லது. பார்க்கும்போதே டிரைவர் குடித்துள்ளாரா அல்லது அவர் பயணிக்கும்போது யாருடனாவது தொடர்பு கொண்டு பாதையை மாற்றுகிறாரா என்பதைக் கவனியுங்கள் அப்படி இருக்கும்போது அருகில் உள்ள உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ அல்லது போலீஸுக்கோ எஸ்எம்எஸ் மூலமாக நீங்கள் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்துங்கள்.

ஆட்டோ தொழிலுக்கு பாதிப்பா?

இந்தத் தொழில்முறை ஆட்டோ ஓட்டுபவர்களைப் பாதிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், ஆட்டோ என்பது குறுகிய தொலைவுக்கு மக்கள் பயன்படுத்தும் வாகனமாக உள்ளது. ஆட்டோ கட்டணங்கள் மீட்டர் படி இயங்கும் இடங்களில் குறைவாக உள்ளது என்று மக்கள் ஆட்டோக்களைத்தான் பயன்படுத்துகின்றனர். கால் டாக்ஸியில் மீட்டர் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் கி.மீக்கு 14 ரூபாயாக உள்ளது. ஆனால், ஆட்டோக்களில் இதைவிட குறைவு. அதனால் ஆட்டோக்களைப் பயன்படுத்தவே அதிகம் விரும்புவார்கள். ஆட்டோக்காரர்கள் மீட்டர் கட்டணத்தைக் கேட்கும் போதுதான் அது அவர்களுக்குப் பாதிப்பாகிறது.

ஒருசில சம்பவங்களால் ஒரு வியாபார முறையை தவறு என்று கூறிவிட முடியாது.  சேவை நிறுவனங்களும் ஓட்டுநர்களைப் பற்றிய விவரம் தெரியாமல் வாடிக்கையாளருக்கு சிக்கலான சூழலை உருவாக்காமல் ஓட்டுநர் பற்றிய விவரங்களை சரிபார்த்து தொழில் செய்தால், இந்த முறையில் குறைவான செலவில் பாதுகாப்பாக பயணிக்கலாம்!


No comments:

Post a Comment