சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Jan 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை தொடங்கியது: ஜெயலலிதா, அன்பழகன், சு.சுவாமி கோரிக்கை நிராகரிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஜெயலலிதா, தி.மு. பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி குமாரசாமியை நியமித்தது.

கடந்த 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தனி நீதிபதி குமாரசாமி விடுமுறையில் இருந்தார். இதனால் அன்றைய தினம் வழக்கை விசாரித்த நீதிபதி பில்லப்பா, மேல்முறையீட்டு மனுக்கள் மீது 5ஆம் தேதி (இன்று) முதல் நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்துவார் என அறிவித்தார். அப்போது, விசாரணையை 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி பில்லப்பா நிராகரித்தார்.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்கள் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பு ஆட்சேபணை செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் தாம் புகார்தாரர் என்பதால் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி குமாரசாமி, ஜாமீன் மனுவை காரணம் காட்டி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை சேர்க்க முடியாது என்றும், வேண்டுமானால் அரசு தரப்புக்கு சுப்பிரமணியன் சுவாமி உதவியாக இருந்து செயல்படலாம் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜர் ஆக இருக்கிறார். எனவே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுவதும் படித்து பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் வழங்க முடியாது, விசாரணையை தொடருங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தொடர்ந்து வாதிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்  என்று தி.மு.. பொதுச் செயலாளர் .அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு மீது ஆஜராகி வாதாடினார்  வழக்கறிஞர் குமரேசன்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி குமாரசாமி, "இந்த வழக்கில் ஏற்கனவே உங்கள் தரப்பு வாதங்களும் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பாதிக் கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு  செய்யப் பட்டுள்ளது. மேல் முறையீட்டு விவாதத்தில் பலர் பங்கேற்றால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க முடியாது. எனவே இதை ஏற்க முடியாது" என்று கூறி அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜர் ஆனார்.No comments:

Post a Comment