சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Jan 2015

நீங்கள் வாங்கும் நெய் தரமானதா? ஷாக் ரிப்போர்ட்


மணல் மணலான நெய், மணமணக்கும் நெய் என்றெல்லாம் நெய் விளம்பரங்களில் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும், நெய் தொடர்பாக நுகர்வோர்கள் சொன்ன கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.

ஒப்பீட்டு ஆய்வு!
ஒப்பீட்டு ஆய்வு என்பது நுகர்வோர் பயன்படுத்தும் பல பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா  என சோதித்து அதில் கண்ட உண்மைகளை வெளியிடுவதாகவும். இதில் அப்பொருள் பற்றிய பயன்பாடு, தரம், பயன்படும் நாட்கள், பயன்படுத்துவதில் நுகர்வோர்க்கு ஆலோசனைகள், தயாரிப்பாளருக்கு ஆலோசனைகள் என பல வகையிலும் இந்த  அறிக்கை அமைந்திருக்கும். கான்சர்ட் இந்திய  நுகர்வோர் நலத்துறையின் அனுமதியுடன் இது போன்ற ஒப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இவ்வகையில் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தலா ஐந்து நிறுவனங்களின் நெய் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டநெய்யின் குணங்களூம் கீழ்க்கண்ட அளவீடுகளில் முக்கிய தன்மைகளின் அடிபடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 1.    
பாக்கெட் செய்தல் மற்றும் விவரச்சீட்டிடுதல்
 2.    
பாதுகாப்பு மற்றும் உடல் நலம்
 3.    
தரம்


நுகர்வோர் கருத்துக்கள்!
நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது போல, நெய் நுகர்வோர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. நுகர்வோர் நெய் வாங்கும் போது என்ன முறைகளை கையாளுகிறார்கள், எப்படி தேர்வு செய்கிறார்கள், வாங்கிய பின் குறையிருந்தால் அவர்கள் அணுகுமுறை என்ன என்பது அறிய 32 நுகர்வோரின் கருத்துக்கள் இங்கே...
1. 41%
பேர் பயன்பாட்டு நாளையும், 29% பேர் தயாரிப்பு தேதியையும் பார்த்து நெய் வாங்குகின்றனர்.
2. 74%
பேர் நல்ல கம்பெனி நெய் தயாரிப்புகளையும் 24% பேர் மற்ற தயாரிப்புகளை வாங்குகின்றனர்.
3. 39%
பேர் 200 கிராம் பாக்கெட் தேர்வு செய்கையில் 18% பேர் 100 கிராம் பாக்கெட் வாங்குகின்றர்கள்.
4. 84%
பேர் வீட்டுத்தயாரிப்புகளை விரும்புவதில்லை ஆனாலும் 13% பேர் வீட்டுத்தயாரிப்புகள் வாங்குகின்றனர்.
5. 76%
பேர் வனஸ்பதி ஒரு கலப்படப் பொருளாக நெய்யில் கலப்பது அறிந்துள்ளனர்.
6. 55%
பேர் வனஸ்பதியால் ஏற்படும் உடல் பாதிப்புகளை அறிந்துள்ளனர்.
7. 52%
பேர் சுத்தமான வனஸ்பதியை வெஜ்டபிள் நெய் என விற்பதை அறியாமல் உள்ளன.
8. 77%
பேர் அக்மார்க் முத்திரையுள்ள நெய்யும் 3% பேர் .எஸ். முத்திரையுள்ள நெய்யை யும் தேடி வாங்குகின்றனர்.
9. 47%
பேர் நெய்யின் தரத்தை அதன் மணத்தை வைத்தும், 16% பேர் சுவையை வைத்தும் தீர்மானிக்கின்றனர்.
10.45%
பேர் நெய்யில் குறையிருந்தால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், 39% பேர் கடைக்காரருக்கு தெரிவிக்கவும் அறிந்துள்ளனர்.

நுகர்வோர் கவனிக்க!
 1.    
நாட்டில் சில பகுதிகளில் உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் வனஸ்பதி வெஜிடபிள் நெய் (Vegetable Ghee) என  விற்கப்படுகிறது. நெய் எனபது ஒரு பால் பொருட்கள் வகையைச் சேர்ந்ததுஎனவே நெய் என்னும் பெயரை தாவர வகை பொருட்களோடு இணைத்துவெஜிடபிள் நெய்என விற்பது ஒரு தவறான செயலாகும். நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்கும் நிலை உள்ளது.
 2.    
இந்திய உணவு விடுதிகளில் நெய்யிற்கு பதிலாக வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. “வெஜிட்டபிள் நெய்என விற்கப்படும் வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. இது இதய இரத்தத் குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே வெஜிடபிள் நெய்யை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
 3.    
நீங்கள் இதய இரத்தக்குழாய்கள் சம்பந்தமான நோய்கள் அல்லது உடல் பருமன் இல்லாதவர் என்றால் சுத்தமான நெய்யை உட்கொள்ளலாம்.
 4.    
ஒரு தனிமனிதன் ஒரு நாளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பின் அளவு என்பது 10 முதல் 15 கிராம் ஆகும்.
 5.    
நீங்கள் பருமனானவர் என்றால் நெய்யை தவிர்க்கவும்.
 6.    
நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டுமே நெய்யின் தன்மையை பாதிக்க கூடியவையாகும்.

பாதுகாப்பு டிப்ஸ்!
 1.    
எப்போதும் நெய்யினை நன்கு மூடி சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்.
 2.    
நெய்யை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாயிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்
 3.    
வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால்,நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டுவிட வாய்ப்புள்ளது.
 4.    
நெய் சுத்தமான கண்டெயினரில் காற்று புகாதபடி அடைத்து வைத்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
 5.    
திறக்காமல் நெய் கண்டெயினரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
 6.    
நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய் பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும்.
 7.    
நீண்ட நாள் பயன்பாட்டிற்கு நெய்யினை ஒளியே புகாத, கண்டெயினரில் காற்று புகாதபடி இறுக்கமாக மூடி இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
 8.    
நல்ல நெய் என்பது ஈரப்பதம் நீக்கப்பட்டும், பால் திடப்பொருட்கள் 2500 F உஷ்ண நிலையில் எரிக்கப்பட்டும், பின்னர் அந்த திடப்பொருட்கள் அகற்றப்பட்டும் தயாரிக்கப்படுவதாகும்.
 9.    
எனவே ஒரு நல்ல நெய் என்பது பால்திடப் பொருள் மற்றும் ஈரப்பதம் இல்லாத ஒரு வெண்ணெயின் கொழுப்பாகும்.


No comments:

Post a Comment