சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2015

கடலும் இல்லை... ஏரியும் இல்லை... ஆனா நடக்குது படகு சவாரி!

ட்டி, கொடைக்கானல்,சென்னை என எந்த சுற்றுலா தலங்களுக்கு நாம் சென்றாலும் போட்டிங் எனப்படும் படகு சவாரி  நமக்கு விருப்பமான விஷயமாக இருக்கும். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதம் இதில் இல்லை. அத்தனை மகி்ழ்ச்சி தருவது படகு சவாரி 

ஆனால் சில பல வேலைப்பளு, நேரமின்மை காரணமாக இவ்விடங்களுக்கு பலருக்கும் சென்று வரமுடியாத சூழ்நிலை இன்று. இந்த கவலை  மதுரை மக்களுக்கு இனி இல்லை. பரபரப்பான துங்கா நகரத்தில் இன்னும் பரபரப்பாகி இருக்கு போட்டிங். மதுரையில் கடலும் இல்லை, லேக்கும் இல்லை. அப்புறம் எப்படிங்க படகு சவாரின்னு பரபரன்னு பல்லை கடிக்கறீங்களா.....பொறுங்க சார்.

நம்ம மதுரை தெப்பக்குளத்தில்தான் இப்ப போட்டிங் நடந்து மதுரை மக்களை பரவசப்படுத்திட்டிருக்கு. 

கடந்த சில மாதங்களில் பெய்த கடும் மழையினால் மதுரை தெப்பக்குளம் வழக்கத்துக்கு மாறாக  நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் இரண்டு வருடங்களுக்குப் பின் மதுரை தெப்பக்குளத்தில் மீண்டும் போட்டிங் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தெப்பக்குளத்தில் நீர் இருந்தாலே ஆச்சர்யமாக பார்க்கும் மக்களுக்கு அதில் படகுகளையும் பார்த்தால் உற்சாகத்தை சொல்லவேண்டுமா......

மதுரை மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் கவர்கிறது இந்த படகு சவாரி. குறைந்த கட்டணம் அதிக ஆனந்தம் என்பதால் மதுரை சுற்றுப்புற மக்களால் பரபரப்பாக காணப்படுகிறது படகுசவாரிக்குழு. அதேசமயம் அசம்பாவிதங்கள் ஏதும் நேராவண்ணம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீச்சல் பாதுகாப்பு வீரர்களும் மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர்.

படகு சவாரி முடிந்து கரைக்கு திரும்பிய மீனா என்ற பயணிபடகு சவாரி செய்ய ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்த ஆண்டு மழை பெய்ததால் ஆசை நிறைவேறி விட்டது ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஆன அனுபவமா இருந்தது.” என்றார் முகத்தில் சந்தோஷம் படர 

படகு சவாரி ஊரெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க இளசுகள் கூட்டம் மட்டும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர். காரணம்  நேற்று வரை தெப்பக்குளத்தில் கிரிக்கெட் விளையாடிய மகேந்திரசிங் தோனிகள் அவர்கள். தங்களது ஈடன் கார்டன் மைதானத்தில் தண்ணீரும், அதில் படகும் இருப்பதைக் கண்டு  “என்றைக்கு இங்கு வந்து விளையாடுவது என கண்களில் தண்ணீர் விட்டபடி இருக்கிறார்கள். 

இளைஞர்களுக்கு இது கவலை என்றால், மற்றவர்களுக்கோ குதூகலம் என களைகட்டுகிறது மதுரை தெப்பக்குளம் படகு சவாரி. ஆனால் படகு சவாரி செய்பவர்களின் ஒரே வருத்தம், தண்ணீர்ல் வரும்  நாற்றம், காரணம் அதில் முன்பு தேங்கிய குப்பை.
குப்பைகளை மாநகராட்சி நீக்கி படகு எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பது இங்கு வருபவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

கிளம்பியாச்சா, போலாம் ரைட்...



No comments:

Post a Comment