வறுமையின் காரணமாக தந்தையுடன் சேர்ந்து பிணத்தை எரிக்கும் வெட்டியான் வேலை செய்து கொண்டு,
மேல் படிப்பு படித்து வருகிறார் சிவகங்கை மாவட்டம்,
கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வாலிபர் சங்கர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிக்கும் முருகேசன்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு
5 பிள்ளைகள்.
பள்ளி படிப்பை முடித்த சங்கருக்கு கல்லூரி எட்டாத இடமாக இருந்தது.
ஆனாலும் தன்னுடைய ஆர்வத்தின் காரணமாக தந்தையுடன் வெட்டியான் வேலைக்கு சென்று,
அதில் குறைந்த பணம் ரூ.
300தான் கிடைக்கும்.
அதுபோக ரயில்வே ஸ்டேசனில் காபி,
ஸ்நாக்ஸ்,
டீ என விற்று அதில் கிடைக்கும் வருமானத்திலும் படித்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல் தன்னுடய தாய், தந்தையையும் காலத்தின் சூழ்நிலையால் இவரே குடும்பத்தையும் பார்த்து வருகிறார். கிடைக்கும் வருமானத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்து முடித்து எம்எஸ்சி படிக்க சென்றார்.
இவருடைய வீடு குடிசைதான்.
நாட்டிற்கு வெளிச்சம் கிடைத்தும் இவர் வீட்டிற்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கவில்லை.
அதனால் படிப்பை ரயில்வே ஸ்டேசனிலும்,
பிணம் எரிக்கும் வெளிச்சத்திலும் படித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் டான்ஸ் கற்றுகொண்டு ஆடல்,
பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
ஓவியம் வரைந்து கல்லூரிக்கு பல பரிசுகளை வென்றுள்ளார்.
கல்லூரிகளுக்கிடையே நடக்கும் ஓவிய போட்டியில் முதல் பரிசும் 'வன உயிரின வார விழா' என்ற தலைப்பில் சிவகங்கை மாவட்டத்தில் முதல் பரிசும், மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மாநில அளவில் ஓவிய சுடர்மணி விருது பெற்றுள்ளார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே சங்கரின் ஏக்கமாக இருக்கிறது. "உதவும் கரங்கள் பல உண்டு; அவர்களால் நானும் பயனடைய ஆசைப்படுகிறேன்" என்கிறார் சங்கர். நிறைவேறுமா சங்கரின் ஆசை? |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
29 Jan 2015
வெட்டியான் வேலை செய்து படிக்கும் பட்டதாரி!
15 ரூபாய் செலவில் உப்பு தண்ணீர் நன்னீராகிறது: கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு
குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.
தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து.
அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்னீராக மாற்றும் செயல்முறை. வீட்டில் உள்ள எளிய வகை பொருட்களை பயன்படுத்தி ரூ.15 மட்டும் செலவழித்து வடிவமைக்க முடியும். உபயோகமற்ற இரும்பு தகரம், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை எடுத்து, அதன் மீது கறுப்பு 'பெயின்ட்' அடிக்க வேண்டும். கறுப்பு நிறம் சூரிய ஒளியை தன்னுள் இழுக்கும் திறன் வாய்ந்தது.
அதை அட்டைபெட்டி அல்லது மரப்பெட்டியில் வைத்து இரும்பு தகட்டின் மீது, மூடிய பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். சூரிய வெப்பத்தில் இந்த நீர் ஆவியாகும். ஆவியான நீர் திவலைகளை, பாத்திரத்தில் ஒரு துளையிட்டு ஒரு 'டியூப்பை' செருகி அதை ஒரு பிளாஸ்டிக் 'பாட்டிலால்' சேகரிக்க வேண்டும். மேல்புறத்தில் ஈரத்துணியை போட்டு வைத்தால் வெயிலில் இது பாதிக்காது.
இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் திவலைகளை அந்த பாட்டிலில் இருந்து 'டியூப்' மூலம் நமக்கு தேவையான பாத்திரத்தில் பிடித்து கொள்ளலாம். நீர் திவலைகள் வெளியேறும் 'டியூப்பை' 'கிளிப்' போட்டு மூடி வைக்க வேண்டும். பாட்டிலில் திவலைகள் நிரம்பிய பிறகே, இந்த 'கிளிப்பை' திறந்து தண்ணீரை வெளியே எடுத்து கொள்ள வேண்டும். எல்லா பொருளும் வீட்டில் உள்ளதே. நாங்கள் இதை ரூ.15 மட்டுமே செலவழித்து உருவாக்கினோம்.பொருள் இல்லாதவர்கள் அதிக பட்சம் ரூ.100 செலவழித்து இதை உருவாக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் நன்னீராக பெற முடியும். எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேலே சென்று, மழை என்ற பெயரில் நன்னீராக உருவாகிறதோ அதை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கினோம்.
இதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி, இயற்பியல் துறை தலைவர் மெய்யப்பன். மதுரையில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த நீர்மேலாண்மை குறித்த போட்டியில் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளால் பாராட்டப்பட்டு மாநில அளவில் முதலிடத்தையும், அதற்காக ரூ.10 ஆயிரம் பரிசும் எங்களுக்கு கிடைத்தது, என்றனர்.

Subscribe to:
Posts (Atom)