சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2014

இ-பே யின் அபார வளர்ச்சி - ஒரு பார்வை.




தற்போது இணையத்தில் பொருட்களை விற்பனை செய்ய பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் முதன்முதலில் பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் என அறிமுகப்படுத்திய இ-பே நிறுவனம் தான் என்றும் முன்ணணியில் உள்ளது.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 ஒரு பொருளை விற்பது மற்றும் சந்தைபடுத்துதலை அடுத்த கட்ட வளர்ச்சியாக இ-காமர்ஸ் அடைந்துள்ளது. இணையத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்வதில் அமெரிக்காவின் இ-பே நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.1995 ஆம் ஆண்டு இ-பே தொடங்கப்பட்டது.அப்போது இணையத்தை பயன்படுத்துவோர் குறைவான விகிதத்தில் இருந்ததால் இ-பே முக்கியத்துவம் பெறாமல் இருந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இ-பே கண்ட வெற்றிதான் இன்று பிற ஆன்லைன் நிறுவனங்கள் வர தூண்டுகோலாக உள்ளது.



 இ-பே நிறுவனத்தை தொடங்கியவர் பியர் மொராட் ஒமிடியர்.இவர் ஒரு ஈரானியர். வளர்ந்தது பிரான்ஸிலும் அமெரிக்காவிலும். கணினி அறிவியல் பட்டபடிப்பு படித்ததுடன் சில நிறுவனகளில் பணியாற்றி வந்த இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இ-பே நிறுவனத்தை தொடங்கினார்.இ-பே நிறுவனத்தை பொறுத்தவரை சொந்த பொருட்களையோ, அல்லது வெளியிலிருந்து பொருட்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டு விற்கும் நிறுவனம் கிடையாது.வாங்குபவருக்கும் , விற்பவருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு சந்தைபடுத்துதல் இடம் மட்டுமே.அதாவது இது ஒரு பிளாட்பாரம் மட்டுமே.இ-பேயின் முதல் விற்பனை பொருள் ஒரு உடைந்த லேசர் சுட்டி.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 



 புதுபொருட்களை மட்டுமில்லாமல்,பழைய பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இவை யாவற்றையும் இணைய உலகில் விற்பனை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்தது இந்த விற்பனைதான்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்துவது என்பது அந்த காலகட்டத்தில் முக்கியமான உத்தி என்று சொல்லலாம்.இதை முழுக்க முழுக்க ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ஒமிடியர். ஆனால் வாடிக்கையாளர்களை கவர சில வசதிகளை செய்து கொடுக்கவும் நினைத்தார் ஒமிடியர்.ஒரு பொருளை சந்தைபடுத்தும் போது அது தொடர்பான விவரங்கள்,பயன்பாடுகள் மற்றும் விலைகள் குறிப்பிடுவதுதான் ஆன்லைன் வர்த்தகத்தில் இதர நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடைமுறையை மாற்றி விலையை இறுதி செய்யும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தார்.அதாவது பேரம் பேசும் வாய்ப்பை கொடுத்தார் ஒமிடியர்.இந்த பேரம் பேசும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஷோரூம் விற்பனைக்கும், ஆன்லைன் விற்பனைக்குமான இடைவெளியை குறைக்க முடிந்தது.அதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் விற்பனையில் பேரம்பேசி வாங்கும் உணர்வை இ-பேயில் வாங்கும்போது அனுபவித்தனர்.





ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

  AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

 இ-பே அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும் உலகம் முழுவது, தனக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கி வைத்துள்ளது. இ-பே தனக்கென்று உருவாக்கி வைத்துள்ள இன்னொரு விஷயம் நம்பகத்தன்மை. ஆன்லைன் வர்த்தகத்தில் வெற்றி பெற அடிப்படை தகுதி பொருட்களின் மீதான நம்பகத்தன்மை தான். இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்ப்பட்ட நிறுவனமாக இ-பே தன்னை உருவாக்கியிருக்கிறது. ஒரு பொருளை சந்தைப்படுத்துகிறது என்றால் உள்ளதை உள்ளபடிதான் காட்சிப்படுத்துவார்கள். தவிர ஒரே மாடலில் பல பொருட்கள் இருக்கிறது என்றால், எல்லாவற்றையும் குறிப்பிடுவார்கள்.





இப்படியான வெளிப்படைத்தன்மை வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுப்பு சுதந்திரத்தை தருகிறது. இ-பே போட்டுக்கொடுத்த பாதையில் தான் இன்றைக்கு உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வந்தன. இன்று சீனாவில் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமாக இருக்கும் அலிபாபா இ-பே யின் இன்னொரு அவதாரம் தான்.ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் அலிபாபா வேறு சில உத்திகளை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் ஆயிரம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் மக்கள் அன்னிச்சையாக தேடும் இணையதளம் இ-பே தான்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 ஒரே பொருளை ஷோரூமில் வாங்குவதைவிட,ஆன்லைன் மூலம் வாங்குவது விலை குறைவாக இருப்பதால், பலரும் விலை குறைவாக இருப்பதால், பலரும் அதிலேயே வாங்குகின்றனர்.இதனால் ஷோரூம் வைத்திருக்கும் நிறுவனங்கள் பாதிப்பை உணர்ந்து வருவதால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கின்றன சில நிறுவனங்கள்.இதன்படி ஷோரூமுக்கு பொருட்களை தருவதாக இருந்தாலும் சரி, ஆன்லை வர்த்தகத்துக்கு தருவதாக இருந்தாலும் ஒரே விலையில் தர முடிவு செய்துள்ளன. ஷோரூமில் அதிக விலைக்கு வாங்கிவிட்டோமே என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாமல் இருக்கவே இந்த முடிவை எடுத்திருக்கிறதாம் அந்த நிறுவனங்கள்.இந்த பிரச்சனையை இ-பே எப்படி சமாளிக்க போகிறது என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment