சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2013

காமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.

"கல்வித்தந்தை" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111-ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம். அவரது வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள். 

சம்பவம் 1 

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் . 


சம்பவம் 2 

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . 

                                     

அப்பொழுது நேரு சொன்னார்; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு . 

சம்பவம் 3 

தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :

"
அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன்என்றார் .....

சம்பவம் 4

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... 

                                       

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ "இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க " என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்துஇதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்என்று சொல்லி அனுப்பி வைத்தார். 

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... "வாங்க வாங்க" என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள். பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள். காமராஜர் கண் கலங்கி விட்டார் . 

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் 

சம்பவம் 5

காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான். அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ மூட்ட தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி கதறினார்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.  பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     


1 comment:

  1. நன்றி...!!!அருமையானால் செய்திகள்

    ReplyDelete