சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

நாராயணசாமி


ஒருவன் : "டேய்...அவர் "போலி" டாக்டர்னு தெரிஞ்சும் ஏண்டா வைத்தியத்துக்கு அவர்கிட்ட போறே?"

மற்றவன் : "டாக்டர் போலியா இருந்தாலும், நர்ஸ் "ஜாலியா" பேசுறா மச்சி"


சைவம்-அசைவம், என்ன வித்தியாசம்?


கசப்புக் கடைல தொங்குற ஆட்டப் பார்த்து கண்ணுல தண்ணி வந்தா அது சைவம், நாக்குல தண்ணி வந்தா அது அசைவம்
!


டெல்லியில் இருந்த நாராயணசாமி தனது பழைய காரை விற்க நினைத்தார்.

அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்ட்து.அதிக
தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.

அவர் தனது பாண்டிச்சேரிநண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.

நாராயணசாமியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெக்கானிக் மாற்றி விட்டார்.

சில நாட்கள் கழித்து பாண்டிச்சேரி நண்பர் நாராயணசாமி யைத் தொடர்பு
கொண்டு பேசியபோது 

"
ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?" என கேட்டார்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே
ஓடியிருக்கிறது....ஏன் விற்கணும்?"

கேவலம்...15 ரூபா கடன் வாங்கியதுக்கு இப்படி என் வீட்டுக்கு நடையா நடக்கிறானே" என தன் நண்பனை நினைத்து வருத்தப்பட்டார் நாராயணசாமி.

"என்னோட 15 ரூபாயை எப்போ கொடுக்கப்போறே" கொஞ்சம் கோபமாகவே கேட்டான் அவன்.


"வர்ற திங்ககிழமை என் வீட்டுக்கு வா...உன் கடனை தீர்த்துடுறேன்" தீர்மானமாகச் சொன்னார் நாராயணசாமி.


"திங்க கிழமையா?... அன்னைக்கு நான் ஊருல இருக்க மாட்டேனே!" பதறினான் அவன்.

அதற்கு அமைதியாகப் பதில் சொன்னார் நாராயணசாமி,

"
ஏண்டா பதட்டப்படுற...அன்னைகு நான்கூடத்தான் ஊருல இருக்கமாட்டேன்
"


நாராயணசாமி ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டார். 

முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவர் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சார். 

கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவர் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான். 

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.

1 comment: